இரவை வானம் விழுங்குகிறது
வானின் மூச்சாய்ப் பறக்கும்
மூடுபனியின் புகையுடம்பு மெல்லத் துலங்குகிறது
மட்கிய மரங்களின் மணம் சூடாய் வந்து
நாசிக்குள் ஏறுகிறது
கார்காலத்துக் காலை வரப்போகின்றது
மரங்களைத் தாண்டிய வானத்தில்
குருவிகள் பறக்கின்றன
பறக்கும் மூடுபனிக்குள் நான் மிதக்கிறேன்.
Thursday, November 1, 2007
Subscribe to:
Posts (Atom)